2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர சபை தேர்தலில் முன்னாள் மேயர் போட்டியிடுவார?

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிட  தீர்மானித்திருப்பதாக முன்னாள் மேயர் இம்தியாஸ் முகம்மட் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

மேலும், தமிழ்மிரர் இணையதளத்திற்கு கருத்துத்  தெரிவித்த முன்னாள் மேயர் இம்தியாஸ் முகம்மட், இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பியவுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

தான் மேயராக இருந்த காலப்பகுதியில் கொழும்பு வாழ் மக்களுக்கு பல சேவைகள் செய்திருக்கின்றேன். அதனால் அவர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது என்னை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாநகர ஆணையாளர்  கடிதம் அனுப்பியுள்ளார். நான் இந்த வாசஸ்தளத்தை விட்டு வெளியேறினால் எங்கு செல்வது. அதன் காரணமாக மூன்று மாத கால அவகாசம் தருமாறு அவர்களிடம் வேண்டியுள்ளேன்.

நீங்கள் மேயராக இருந்த காலப்பகுதியில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றிர்கள் என முன்னாள் மேயர் இம்தியாஸிடம் தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

அவர்கள் கூறுவது போன்று நான் ஒரு போது ஊழல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
அவ்வாறு நான் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், இன்று வீடொன்றை பெற்றுக் கொள்வதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை எனறார் இம்தியாஸ் முகம்மட்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக யார் போட்டியிடுவது என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)


  Comments - 0

  • xlntgson Wednesday, 30 June 2010 10:23 PM

    இவர் வீடொன்றுக்காகக் கெஞ்சுகிறாரா, மாநகர முதல்வர் பதவிக்காகவா? இவர் எழுத்தறிவற்றவர் என்று பகிங்கரமாக நகரஆணையாளர் கூறியபோது எங்கிருந்தார், இவரைப் பின்னிருந்து இயக்கிய ராஜேந்திரன் எங்கே? இவர் முதல்வர் பதவிக்குபொருத்தமற்றவர் என்றால் இவரது தகைமை தான் என்னவோ? உறுப்பினர் ஒருவர் தான் மேயர் ஆவார் என்பது நியதி அல்லவா? மீண்டும் விதிவசத்தால் முதல்வர் ஆனால் மீண்டும் மீண்டும் கலைக்க வேண்டியது வருமோ? ஐ தே க அதிக இடங்களைப்பெறும்போது மீண்டும் ஒரு கூட்டு, கலைப்பு என்று ஜனநாயகம் கேலிக்கூத்தாகக்கூடாது, பாருங்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .