2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கோவையில் இன்று மூன்றாவது நாளாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாம் நாளான இன்றும் மங்கள இசையுடன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பமாகிறது.

இன்றைய நிகழ்வில் கவியரங்கம், பட்டிமன்றம் சிறப்புக் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. 

இதேவேளை, மாநாட்டு வளாகத்தில் "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்' மிகவும் விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டு வைக்க, இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அதனைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .