2025 ஜூலை 19, சனிக்கிழமை

கெஹலிய, ஜயம்பதி ஆகிய இருவரும் ஊழல் வழக்கிலிருந்து விடுதலை

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர்,  இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து இன்று (20) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெகுசன ஊடக அமைச்சராக, கெஹெலிய ரம்புக்வெல்ல இருந்த வேளையில், அவரது தனிப்பட்ட தொலைபேசி பட்டியலை, அரசாங்க அச்சு திணைக்களத்தின் நிதியில் செலுத்தியதாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் மற்றைய சந்தேகநபராக அரசாங்க அரசாங்க அச்சு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஜெயம்பதி ஹீன்கெந்த பெயரிடப்பட்டிருந்தார்.

முன்னதாக, இவர்கள் இருவருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க முடியாது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த மாதம் 20ஆம் திகதி அறிவித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X