2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'கோட்டாவுக்கு பதவி கொடுத்தால் சு.க ஐக்கியப்படும்'

Thipaan   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வௌ;வேறு அணியினரை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவி ஒன்றைக் கொடுத்து, அவரது ஆதரவை ஜனாதிபதி கோரவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கேட்கவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையேயான உறவுகளைச் சீர்ப்படுத்த, மேற்கூறிய உபாயத்தை பரப்புரை செய்ய, அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் உட்பட சில சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, கட்சியின் இரண்டு அணிகளுக்கும் ஏற்புடையவராக இருப்பதனால், கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான மிகச்சிறந்த தெரிவாக அவரே இருப்பதாக ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார்.

'ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு சில எதிர்ப்புகள் இருப்பினும் கோட்டாபயவுக்கு எதிராக எதிர்ப்பு ஏதுமில்லை' என அவர் கூறினார்.

'யுத்தத்தில் வென்றவர் மற்றும் நகர அபிவிருத்தியில் சாதித்தவர் என்ற ரீதியில், அவர் பலராலும் போற்றப்படுபவர்' என்றார்.

இந்த முன்மொழிவு தொடர்பாக ஜனாதிபதியிடம் பேச, இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X