2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கோப் அறிக்கை: முதலாவது அமர்வில் விவாதம் நடக்கும்

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா   

“மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான கோப் அறிக்கை மீதான விவாதம், 2017ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எடுத்துக்கொள்ளப்படல் வேண்டும்” என்று, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, கடி​தமொன்றை எழுதியுள்ளார்.   

“இந்தக் கோப் குழு தொடர்புடைய அறிக்கை, கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், புதிய வருடத்தின் முதலாவது அமர்விலேயே, விவாதம் நடத்தப்படுதல் வேண்டும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .