2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

385கிராம் ஹெரோய்னுடன் மாலைத்தீவு பிரஜைகள் இருவர் கைது

Kanagaraj   / 2016 ஜூலை 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஊடாக, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர்கள் இருவரை, தெஹிவளை பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மாலைத்தீவு பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும், கொழும்பை மையப்படுத்தியே இந்த ஹெரோய்ன் வர்த்தகத்தை மேற்கொண்டுவந்ததாக அறியமுடிகின்றது.

அவ்விருவரிடமும் இருந்து 385கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. மருத்து குளிசைகள் போலவே, ஹெரோய்னை இவ்விருவரும் வைத்திருந்துள்ளனர்.

அவ்விருவரையும் தடுப்புக்காவல் உத்தரவில், தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .