2021 மே 10, திங்கட்கிழமை

'குழிதோண்டியது யார்?'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் சென்ற போதும், தன்னுடைய தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அக்கட்சியிலேயே இருந்ததாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 'அரசாங்கம், எம்மீது அச்சம்கொண்டுள்ளது. அதனால் தான், ஒன்றிணைந்த எதிரணியினது பாதயாத்திரையின் இறுதிக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்த கொழும்பு ஹைட் மைதானத்தில், அரசாங்கச் செலவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன' என்றும் நாமல் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, நான்காவது நாளாக நேற்று, நிட்டம்புவ பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. காலை 10.10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.

அதில் கலந்துகொண்ட நாமல், 'ஒன்றிணைந்த எதிரணியின் பாதயாத்திரையைக் குழப்புவதற்கு, பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொலிஸ்மா அதிபர் நேர்மையானவராக இருந்தால், சட்டத்தைச் சரியாக அமுல்படுத்தட்டும்' என்று சவால் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X