2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கைவிரல் அடையாள கடவூச்சீட்டு முறையால் மக்கள் அவதி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன தொழில்நுட்பத்துக்கு அமைவாக கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கிய கடவூச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக கடவூச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு தாமதம் ஏற்படுவதால் தாம் மிகப்பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச முறைகளுக்கு அமைவாக இந்த கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவூச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், கடவூச்சீட்டை பெறுபவரது புகைப்படத்தை கணினி மயப்படுத்தும் போது ஏற்படும் தெழில்நுட்ப பிழைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .