2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சொகுசு வாகனத்தை நிராகரித்த தென் மாகாண ஆளுநர்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண ஆளுநருக்கு, 430 இலட்சம் ரூபாய் செலவில் வாகனமொன்றை  ​கொள்வனவு செய்வதற்காக, மாகாண சபையில் ஒதுக்கப்பட்ட நிதியை, அவர் நிராகரித்துள்ளார்.

அத்துடன் குறித்த நிதியை, அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும், விசேட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற எண்ணியுள்ளதாக, அளுநர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X