2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல்; 14பேர் இன்று பிணையில் விடுதலை

Super User   / 2010 மே 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள  சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 14பேர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேரையும் ஏற்கனவே பிணையில் விடுதலை செய்தமைக்காக பொலிஸாரை கண்டித்திருந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம்,  அவர்களை இன்று  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு அவர்கள் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களில் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கடந்த மாதம் மார்ச் 22ஆம் திகதி இனந்தெரியாத குழுவினர் சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--