2020 நவம்பர் 28, சனிக்கிழமை

'சகோதரத்துவமிக்க நாட்டை கட்டியெழுப்ப கைகோர்ப்போம்'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை குறிக்கும் நத்தார் தினத்தன்று அனைத்து இன மக்களும் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றாக கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினார்.  

கிறிஸ்தவ சமய பக்தர்களுக்காக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (23) பிற்பகல் விசேட நத்தார் தின விழாவில்  உரையாற்றிய போNது ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இன்று எங்கள் நாட்டுக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி தேவைப்படுகிறது என்று கூறிய ஜனாதிபதி, அனைத்து மதங்களும் கூறும் சமாதானம் சகோதரத்துவம் மற்றும் பொறுமை காக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பேராயர் வண. மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--