2021 ஜனவரி 27, புதன்கிழமை

’சஜித் வேண்டும்’ என கோரி உண்ணாவிரதம்

J.A. George   / 2019 நவம்பர் 22 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, நபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு முன்னிலையில் இன்று (22) காலை இந்த உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

"ரணில் அவர்களே இப்போது போதும்,  சஜித் பிரேமதாசவிடம் தலைமைத்துவத்தை ஒப்படையுங்கள்” என, எழுதப்பட்டுள்ள பதாகைகளை தாங்கி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு தலைமை பதவி வழங்கும்வரை தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .