George / 2016 ஜூலை 08 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பிணை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை(08) பிறப்பித்துள்ளார்.
5 இலட்சம் ரொக்கப்பிணை மற்றும் 50 இலட்சம் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
61 கோடி ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்ட முறை தொடர்பில் உரிய காரணத்தை வெளிப்படுத்தாத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தன மற்றும் அவரது கணக்காளர் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .