Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூன் 12 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் யாழ். மாவட்டத்தில் படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துச் செல்கின்றன. ஆயுத குழுக்களினால் அப்பாவி மக்களிடமிருந்து வரிகளும் கப்பங்களும் அறவிடப்படுகின்றன.
சட்டவிரோத ஆயுதக் குழு உறுப்பினர்கள் உயிர்வாழ்வதற்கா வேண்டி இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொண்டு வருகின்றன. அத்தோடு எனது கணவர் குறித்து பேசுவதற்கு இந்த ஆயுதக்குழுவைச் சேர்ந்த எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஆயுதங்களை பதிவு செய்தல் தொடர்பான தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்,
எனது கணவர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. கொலையாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை.
மேலும், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு படுகொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கு சட்டவிரோத ஆயுதக் குழுக்களே காரணம். அந்த குழுக்களின் சட்டமே அங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago