2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சுனாமியில் சேதமான காத்தான்குடி பிரதேச வைத்தியசாலையை மீள திறக்க ஏற்பாடு

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தின்போது சேதமடைந்த காத்தான்குடி பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் 70 கோடி ரூபா செலவில்  மேற்படி வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வைத்தியசாலை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரால் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் இவ்வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--