2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சபையில் தீவிரம் : இரு முறை ஒத்தி வைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை அமர்வின் போது 6 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கதிரைகள் கொள்வனவு குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மேல் மாகாண  ​முதலமைச்சர்  இசுரு தேவப்பிரிய, குறித்த கதிரைகள் கொள்வனவு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனப் பதிலளித்தார்.

இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான மஹேஷ் அல்மேதா, இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்ன சஞ்ஜீவ, மொஹமட் பாஹீஸ் ஆகியோர் சபையின் மத்தியில் வந்து தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், மேல் மாகாண சபை ஆளுநர் ஹேமகுமார மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால் சபையில் ஏற்பட்ட தீவிர நிலையின் காரணமாக, சபை இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--