2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு இடமில்லை

Gavitha   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோவில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம், இந்தியாவிலுள்ள பிரபல பெண்ணியவாதி, திருப்தி தேசாய், 100 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்குச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், 'ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளது. அதில் தீர்ப்பு வரும்வரை, கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை' என்று அவர் கூறியுள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவாதங்களால்தான், அசம்பாவிதங்கள் நடப்பதாகவும் அக்கோவிலில் இரு நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர் என்ற ஒரு பேச்சும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--