Menaka Mookandi / 2017 மே 29 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதால் பிரச்சினைகள் எழக்கூடும். அதனால், உலருணவுப் பொருட்களை மாத்திரம் அம்மக்களுக்கு வழங்குமாறும் சமைத்த உணவை வழங்க வேண்டாமென்றும், சப்ரகமுவா மாகாண இடர் முகாமைத்துவக் குழு, அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதாயின், கீழ்க் காணப்படும் வகையிலான உதவிகளை வழங்குமாறும், அக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வகையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக, குடிநீர்ப் போத்தல்கள், உலருணவுகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் நெப்கின்ஸ்கள் போன்றன அவசரமாகத் தேவைப்படுவதாக, அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago