2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சம்பந்தன் - ஜி.எல்.பீரிஸ் சந்திப்பு நட்புரீதியானது என்கிறார் சுரேஷ்

Super User   / 2010 மே 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகந்தினி ரட்னம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அந்தக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சற்றுமுன் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்க தரப்பிலிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வமான  அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--