2021 ஜனவரி 20, புதன்கிழமை

சீருடை வவுச்சர்களை விநியோகிக்க திட்டம்

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை  முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க கூறியுள்ளார்.

பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான போதிய காலம் இன்மையால் புதிய வருடத்துக்கான சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், 45 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கு பதிலாக வுவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கூறியுள்ளார்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம், முதல் வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .