Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 02 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தத்துக்குள்ளான இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் அர்ப்பணிப்புடன் முன்வந்தமை, தற்போதைய அரசாங்கத்தின் நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டுக்கு வருகை தந்துள்ள மாலைதீவுகளின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி மொஹமட் அஸீம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதியை, இன்று (02) முற்பகல் சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாலைதீவுகள் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்காக மாலைதீவு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த மாலைதீவு வெளிநாட்டு அமைச்சர், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
திடீர் அனர்த்தத்தினால் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு மாலைதீவுகள் அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை மாலைதீவு வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளை நினைவூட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் அனைத்து உறவுகளையும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் சிலர் குற்றம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாலைதீவுகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .