2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கைதிகளிடையே பரவும் காசநோய் - சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர்

Super User   / 2010 மே 31 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலுள்ள சிறைக்கைதிகள் மற்றும்  குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோரின் மத்தியில் காசநோய் வெகு விரைவாக பரவிவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேஜர் வி.ஆர்.சில்வா தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் காணப்படுகின்ற நிலையில், அங்கு விசேட வார்ட் பிரிவு திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 70 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இவர்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  மேஜர் வி.ஆர்.சில்வாகுறிப்பிட்டார்.

இதேவேளை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.யூ.குணசேகர,  மேற்படி நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களையும் பார்வையிட்டார்.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .