2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

தகவல் தெரிந்தவர்ஙள் அறிவிக்கவும்

Editorial   / 2025 டிசெம்பர் 05 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். கொழும்பு டேம் ஸ்டீட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிட பகுதியின் தேனீர் கடை ஒன்றுக்கு அருகில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை டேம்ஸ்டீட் பொலிசார் இன்று (05) மாலை 04 மணியலவில் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் பஸ் ஒன்றில் வருகை தந்ததாகவும்,சுகவீனமுற்ற நிலையில் இவரை புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில் குறித்த நபர் தடுமாற்றத்துடன் தேனீர் கடை ஒன்றின் அருகில் காணப்பட்ட கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழ்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டேம்ஸ்டீட் பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை உயிரிழந்த நபரின் ஊர்,பெயர் போன்ற தகவலை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X