Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 31 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகளின் உயர் பதவியில் உள்ளவர்களது பதவிகளில், எதிர்வரும் காலத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.
மலசலக்கூட சுவரைத் துளையிட்டு, நான்கு கைதிகள் தப்பிச் சென்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர், சம்பவம் தொடர்பிலான துரித விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
கைதிகள் தப்பிச் செல்வதற்கு, சிறைச்சாலை காவலர்கள் உதவி செய்தனரா சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை 2 வார காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
“கைதிகள், மதிலைத் துளையிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், அங்குள்ள அதிகாரிகள், அவர்களுடைய கடமையை எவ்வாறு செய்திருக்கின்றனர் என்பது குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். கைதிகள் தப்பிச் சென்றமைக்கான முழுப்பொறுப்பையும், சிறைச்சாலை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும், சிறைச்சாலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதையடுத்து, சிறைச்சாலைகள் ஆணையாளர், சம்பவ இடத்துக்கு விஜயத்தை மேற்கொள்ளாமை, பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது அவர், சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளிடமும் உத்தியோகத்தர்களிடமும், சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பாகக் கேட்டறிந்த அமைச்சர், உரிய அறிவுரைகளை வழங்கினார். சம்பவம் இடம்பெற்ற அன்று, பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் தொடர்பாக, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அமைச்சர் விசாரித்தார்.
இதேவேளை, கைதிகள் தப்பியோடிய மதில் துளைகள், சீமெந்தினால் அடைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, இச்சிறைச்சாலையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக, நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
கைதிகளைப் பார்வையிட வருவோரிடமும் கைதிகளிடமும் பல்வேறு காரணங்களுக்காக பணம் அறவிடப்படல், சிறைச்சாலையில் போதைப் பொருட்களை கொண்டு செல்லல், அலைபேசிகளை கைதிகள் பயன்படுத்த அனுமதித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள், நீர்கொழும்பு சிறைச்சாலையின் சில உத்தியோகத்தர்கள் மீதும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஈஸி கேஸ் மூலமாகவும் சில ஜெயிலர்கள் இலஞ்சமாகப் பணம் பெறுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago