2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சேறு பூசும் முயற்சியில் தமிழக புலி ஆதரவு சக்திகள் ஈடுபடுகின்றன-அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தமிழகத்தின் புலி ஆதரவு அரசியல் சக்திகளும் இங்குள்ள சில சக்திகளும் தன்மீது சேறுபூசி அவமானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தனக்கு எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தான் பல தடவைகள் இந்தியா சென்று வந்துள்ள போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு இவ்வாறான பிரச்சினை ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், இப்போது சட்டப் பிரச்சினையொன்றே தோன்றியிருப்பதால் அதற்கு சட்ட ரீதியாக முகங்கொடுக்கத் தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக நீதிமன்றங்களில் இலங்கைத் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் சகலருக்கும் போல் வழக்குகள் காணப்படுகின்றன. எனக்கு மட்டுமே வழக்கு இருப்பதாகவும் என்னை குற்றவாளியென அடையாளப்படுத்தவும் சில சக்திகள் முனைகின்றன என்று கூறிய அவர் அதன் காரணமாக சென்னை நீதிமன்றமொன்று தன்னை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்திருக்கின்றது.

ஏற்கனவே இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கை 1987 ஜூலை 29ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட போது சகல அரசியல் தலைவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது என்றார். அவ்வாறானதொரு நிலையில் இப்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இதனை நான் சட்டப்பிரச்சினையாகவே பார்க்கின்றேன். சட்டரீதியாகவே அதற்கு முகங்கொடுக்கத் தீர்மானித்திருக்கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .