2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

’சிவாஜிக்கு தேர்தலில் போட்டியிடும் நோய்’

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த மாவை, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். 

“போட்டியிடாவிட்டால் உயிரை விட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்காவிட்டாலும், இன்று தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. போட்டி பலமானது.

“2015ஆம் ஆண்டு இருந்ததை விட மாறுப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று நாங்கள் அனைவரும் உள்ளோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்.

“இப்பொழுதும் ஒரு தரப்பினர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்ற ஒரு நிலைமையே இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் ராஜித, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .