2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சிவாஜிலிங்கத்துக்கு விசா மறுப்பு?

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமையால், இந்தியா, ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பயிலரங்கில் பங்குப்பற்ற முடியாத நிலைமையொன்று, அவருக்கு ஏற்பட்டுள்ளது.  

சிவாஜிலிங்கத்தின் கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே, அவருக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது.  

இந்த பயிலரங்கில் பங்குபற்றுவதற்காக, வடமாகாண சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் 12 பேர், அதிகாரிகள் அறுவரென, 18 பேரடங்கிய குழு, இந்தியாவை நோக்கி நேற்றுக்காலை (16) புறப்பட்டுச் சென்றது.  

ஏசியா பௌன்டேஷன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிலரங்குக்கு, அவுஸ்தி​ரேலிய அரசாங்கம் நிதியுதவிச் செய்துள்ளது.  

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் நடவடிக்கைள் தொடர்பில், இந்த பயிலரங்கு நடைபெறுவதுடன், வடமாகாண சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள், கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் நடைபெற்ற பயிலரங்குகளில் பங்கேற்றனர். வட மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய மூன்றாவது குழுவே, நேற்று (16) புறப்பட்டுச் சென்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--