2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சவூதியில் மண்திட்டு சரிந்து விழுந்ததில் இலங்கையர் பலி; மற்றொருவர் காயம்

Super User   / 2010 மே 27 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதியில் மண்திட்டு சரிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகர விமான நிலையத்திற்கு அருகில் இருந்த பாரிய குழியொன்றிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
 
இதில் பிலியந்தளையைச் சேர்ந்த தச்சுத் தொழி லாளியான ஆர்.பி.ஷெல்ட்டன் ரஞ்ஸாகொட (வயது 41)என்பவரே உயிரிழந்தவராவார். அத்துடன் கம்பஹாவைச் சேர்ந்த மற்றொருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சவூதி நேரப்படி நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக சம்பவத்தில் உயிர்த்தப்பியுள்ள பிலியந்தளை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பந்துல பிரதீப் குமார என்பவர் ரியாத் நகரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--