2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சவூதி இளவரசர் காத்தான்குடிக்கு விஜயம்

Editorial   / 2017 ஜூலை 22 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்,  காத்தான்குடிக்கு நாளை (23) விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகருக்கு வருகை தரும் சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழுவினர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அரச உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொண்டு இருதரப்பு மற்றும் முதலீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .