2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சிகரெட்டுக்கு பதிலாக கடதாசி!

George   / 2016 ஜூலை 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாபாரியொருவரால் தனது ஹோட்டலில் விற்பனை செய்ய கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட் பக்கெற்றுக்கள் இரண்டை திறந்து பார்த்த போது அவை அதற்கு சிகரெட்டுகள் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

முகவர் ஒருவரிடமிருந்து இந்த சிகரெட் பக்கெற்றுகள் குறித்த ஹோட்டல் உரிமையாளரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அந்த பக்கெற்றுகளில் சிகரெட்டுக்குப் பதிலாக கடதாசி சில வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிகரெட் பக்கற்றுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்ததால் அதில் சந்தேகம் வரவில்லை என குறித்த வியாபாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முகவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X