2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சு.கவின் மத்தியகுழு மைத்திரி தலைமையில் கூடுகிறது

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர மத்தியக்குழு கூட்டம் எதிர்வரும் (11) புதன்கிழமை நடைபெற உள்ளதென ​அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூடவுள்ளது.

குறித்த தினத்தில் மாலை.07.00 மணியளவில் மத்திய குழு கூட்ட உள்ளதாகவும், இதன் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலுக்கு முகம்கொடுக்கும் விதம் தொடர்பாகவும் ஆராயப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே தினத்தில் அக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அ​ழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான கூட்டடும் நடைபெற உள்ளதென ​அறிய முடிகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X