2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சொன்னதைக் கேட்காத 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய பொருட்கள் 16ஐ கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமான சுமார் 650 விற்பனை நிலையங்களை கடந்த 4 நாட்களாக சோதனையிட்டதாக அந்த சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 10,162 விற்பனை நிலையங்கள் சிக்கியதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் ஊடாக 4 கோடி 57 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .