2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

செயலாளரை நீக்குக: ஜனாதிபதிக்கு மனு

Gavitha   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை உடனடியாக நீக்குமாறு கோரி, 58 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர் .

58 எம்.பிக்களுக்குமான வாகன குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு, செயலாளர் நிமால் போபகே மறுப்பு தெரிவித்ததையடுத்தே, இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியபோதிலும், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும், இதன்மூலம் அவர் அமைச்சரவைக்கு எதிராக செயற்பட்டுள்ளார் என்றும் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அவர் பல முறை அரசாங்கத்துக்கு எதிராக சவால் விடுத்துள்ளதாகவும், எனவே  இனிவரும் காலப்பகுதியில் அவர் அந்தப் பதவியில் இருக்கக்கூடாது என்றும், எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .