2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சி.விக்கு எதிராகவும் முறையிட முஸ்தீபு

Gavitha   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண  விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் -பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பில், விவசாய அமைச்சருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சரை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் முயன்றமையால், இவ்விவகாரம் தொடர்பில் முறையிடவுள்ளதாக அந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .