Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்
“முதலமைச்சர் நிதியம் தொடர்பாக, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வடக்கு ஆளுநர் அலுவலகம், வட மாகாண பேரவைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில், இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமான உதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை நிறைவு செய்யும் பொருட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கத் தீர்மானித்தோம். இலங்கை மத்திய வங்கி, பிரதம கணக்காய்வாளர், ஆளுநரின் பிரதிநிதி ஆகிய ஒருவரின் ஊடாக நிதி கையாளப்பட்டு, வெளிப்படுத்தல் தன்மையுடன் அந்த நிதி வைக்கப்படவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்த போதும் அனுமதி வழங்கப்படவில்லை.
முதலமைச்சர் நிதியம் தொடர்பாக அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என கடந்த மாதம் நான் முதலமைச்சரிடம் கேட்டபோது, “ஒரு மாத காலத்துள் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். அதனால் தற்போது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம்” என முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், ஒரு மாத காலமாகியும் அது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னமும் 2 வாரங்கள் பொறுமை காக்கலாம் என நினைக்கின்றேன்.
போரால் ஏற்பட்ட இழப்புகளை கணிப்பிட்டால், குறைந்தது 1 இலட்சம் கோடி ரூபாய்கள் இருக்கும். ஆனால், மக்களுக்காக அரசாங்கம் ஒரு சில வீதங்களையே தந்தது. இவ்வாறான சூழ்நிலையில், முதலமைச்சர் நிதியத்தை முடக்கி வைத்துள்ளது. இதனைக் கண்டித்து, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வட மாகாண முதலமைச்சர் அலுவலகம், வடக்கு மாகாண பேரவைச் செயலகம், வடமா காண ஆளுநர் அலுவலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றை முடக்கத் தீர்மானித்துள்ளோம். அரசியல் தீர்வு இல்லை, வாழ்வாதார உதவிகள் இல்லை, என மெல்ல மெல்ல மக்கள் மடிந்து கொண்டு இருக்கின்றார்கள். அதனை தடுக்க வேண்டும். இதற்காக முதலமைச்சர் நிதியம் தேவை” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
49 minute ago
1 hours ago