2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி கோட்டாபயவை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை, பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் அந்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக்கொண்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாழ்த்தை  தெரிவித்திருந்ததுடன், பின்னர் தொலைபேசி மூலம் அழைத்து இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .