2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு மனு

Super User   / 2010 மே 25 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் 50 பேர் குறித்த மனுவில்  கையொப்பமிட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித்த ஹேரத், ஜெனரல் சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருப்பானது மனிதநேயமற்ற செயல் எனவும் குறிப்பிட்டார்.

வெசாக் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்படுவார் என தாம் நம்புவதாகவும் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவே உண்மையான யுத்த வீரர் என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--