2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணைக்கு மூன்றாவதாகவும் இராணுவ நீதிமன்றம்

Super User   / 2010 மே 07 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென  மூன்றாவதாகவும் இராணுவ நீதிமன்றம்மொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த மூன்றாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்படவுள்ளதாக பதுகாப்புத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் குறித்த ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.


  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .