2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா யுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடுவதாக குற்றச்சாட்டு

Super User   / 2010 மே 21 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜெனரல் சரத் பொன்சேகா யுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்தக் குற்றசாட்டை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வருடம் மே மாதம் 19ஆம் திகதியே கொல்லப்பட்டார் என்றும், அவர் கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதி கொல்லப்படவில்லை எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துரைத்திருந்தார். அத்துடன், போர் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்தே,  பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும்  நேற்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஜெனரல் சரத் பொன்சேகா மீது கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--