2025 ஜூலை 12, சனிக்கிழமை

’ஜெனீவா செல்ல தயங்கமாட்டோம்’

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்” என்று, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

அம்பாறை, சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,   

“முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும் மிகவும் ஆணித்தரமாகவும் பக்குவமாகவும் முஸ்லிம் அரசியல் சக்திகளும், சமூக இயக்கங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியபோதும் நாசகாரர்களின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.

அமைச்சுப் பதவியை வகிப்பதால் நாங்கள் அடங்கிப்போகவேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட முடியாது. சமூகத்துக்கான பாதிப்புக்கள் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயப்போவதும் இல்லை.  

முஸ்லிம்களை துன்புறுத்தி வரும் பொதுபல சேன போன்ற இனவாத இயக்கங்கள், இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரானதும் முன்னரானதுமான வரலாற்றை ஆழமாக படித்துப் பார்க்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .