2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’ஜபுர’ மாணவன் மீதான பகடி​வதை; 15 பேருக்கு வகுப்புத் தடை

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவரொருவரை பகடிவதைக்கு உட்படுத்தியபோது ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்க, பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு வகுப்புத் தடைக்கு உள்ளாக்கப்படும் மாணவர்களில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அறுவரும் உள்ளடங்குகின்றனர்.

விபத்துக்குள்ளான மாணவன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .