2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

டெங்குக் காய்ச்சல் காரணமாக 41 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனரென, சுகாதார அமைச்சின் நோய்தொற்று பிரிவு தெரிவித்துள்ளது.

அததுடன், 37 ஆயிரத்து 165 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நோய்தொற்று பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, டெங்குத் தொற்றுப் பரவல் கனிசமாக குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்து 185 ஆகும்.

மேலும், கொழும்பை அடுத்து மட்டக்களப்பில் அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அங்கு 4 ஆயிரத்து 191 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--