Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 16 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில், 12 பேர் டெங்கு தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளனரென, டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதுடன், 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 4,057 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில், 1,001 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 312 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில், டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மாநகர சபைகள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுமக்கள் கவனக்குறைவாக இருப்பதனாலேயே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, மாநகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமென, மாநகர சபை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago