2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

டிலந்தவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்

Kanagaraj   / 2016 மார்ச் 28 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி. பாரூக்தாஜூதீன்

2008ஆம் ஆண்டு, சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பொன்றை அமைத்துத் தருவதாகக் கூறி, ஜப்பானியப் பிரஜை ஒருவரிடம் 600,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டி, இலங்கையின் பிரபல கார்ப்பந்தய வீரரான டிலந்த மலகமுவ மற்றும் வேறு இருவருக்கு எதிராக, சட்டமா அதிபர், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று (28) வழக்குத் தாக்கல் செய்தார்.

சட்டமா அதிபர், மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். ஹெயன்துடுவ முன்னிலையில், சந்தேகநபர்களிடம் குற்றப்பத்திரிகையைக் கையளித்தார்.

இந்தக் குற்றத்தை, 2008ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதிக்கும் 2008ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், குறித்த மூன்று சந்தேகநபர்களும் புரிந்ததாக சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டினார்.

பட்டியற்படுத்திய ஆறு ஆவணங்களை ஆதாரங்களாகச் சமர்ப்பித்ததுடன், வழக்குக்கான சாட்சியங்களாக எண்மரைப் பெயர் குறித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .