2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தடங்கல் வந்தால் புதிய சட்டம் வரும்

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்கத்துக்கு தடங்கல் ஏற்படின், தேவையேற்படும் போது புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஏதாவது ஒரு சமயம், இனத்துக்கு எதிராக வெறுக்கத்தக்க வகையிலான கருத்துகளை பரப்புதல் அல்லது வன்முறை செயற்பாடுகளை தூண்டிவிடும் நபர்களுக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

அலரிமாளிகையில், விசேட அறிவிப்பொன்றை நேற்று (12) விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

அதனடிப்படையில்,தற்போது சிற்சில நபர்களை கைதுசெய்வதற்கு, பொலிஸார் சட்டரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேவையேற்படின் புதிய சட்டமொன்றை நிறுவி, அதனை நிறைவேற்றி செயற்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றது, நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்காகும். அதனடிப்படையில் செயற்படுவது புதிய நிலைமையல்ல என்றும், அந்த வேலைத்திட்டத்தை இன்னுமின்னும் உறுதிப்படுத்துவது மட்டுமேயாகும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.  

30 வருட யுத்தத்துக்கு பின்னர், சகல மக்களுக்கு ஒன்றிணைந்து ஐக்கியப்பட்டு முன்னோக்கி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். வேறு மதத்துக்கு வேறு கலாசாரத்துக்கு மதிப்பளிப்பதற்கு எங்களுக்க திறமை இல்லை என்றால், இலங்கையராக இருக்கமுடியாது என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

இஸ்லாம் மத ஸ்தானங்கள் சிலவற்றுக்கும்; மற்றும் வர்த்தக நிலையங்கள் சிலவற்றின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தற்போது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X