Editorial / 2020 ஜனவரி 04 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்டலெட்சுமித் தோட்டம் - எல்பட மேல் பிரிவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை அத்துமீறி சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
குறித்த நபர் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான மரங்களையும் வெட்டியுள்ளதோடு, அப்பிரதேசத்தில் உள்ள தேயிலை மரங்களை அகற்றி, அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வந்த பாதையையும் மறைத்து, அங்க வசித்து வருபவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும், நோர்வூட் பொலிஸாரிடமும் முறைப்பாடுகள் முன்வைத்திருந்தபோதிலும் இருவரும் உரிய முறையில் செயற்படவில்லை என்பதால், இச்சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரை இன்று கொட்டக்கலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது தோட்ட நிர்வாகத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் அலைபேசியூடாகக் கேட்டறிந்துக்கொண்ட அமைச்சர் தொண்டமான், இதுத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் இளைஞரணித் தலைவர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக ஜீவன் உறுதியளித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago