2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தனுன திலகரட்ன இலங்கையிலேயே தலைமறைவு- பொலிஸ் பேச்சாளர்

Super User   / 2010 மே 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன இன்னமும் இலங்கையிலேயே தலைமறைவாகியுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த அவர், தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், திலகரட்னவை கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது கடவுச்சீட்டை பொலிஸார் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் அவரது கடவுச்சீட்டு தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து தனுன திலகரட்ன நிதிக்கொள்வனவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு  கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதேவேளை, அநுராதபுரம், கொழும்பு, எம்பிலிப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள இரவுநேர விடுதியில் தனுன திலகரட்னவை சிலர் கண்டிருப்பதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, வெளிநாட்டு வங்கிகளில் தனுன திலகரட்ன கணக்கு வைத்திருப்பது தொடர்பிலான விபரங்களை பெற்றுகொள்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--