2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தனியார், கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு ஏற்ப பேராயரின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன், நாட்டின் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை, பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் சுனந்த காரியபெரும கூறியுள்ளார்.

முன்னதாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

கல்வி அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .