2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமனம்

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்ற பெருமை இவரையேசாரும்.

கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--