2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய, எதிலிவெவ, மீகஸ்ஆராவ, புபுதுவெவதிவ பகுதியில் இன்று (14) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

வை.ஈ. லால் பிரேமகுமார என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .